சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்த திருமுருகன்(33) தனக்கு இரண்டாவதாக கல்லூரி மாணவியைத் திருமணம் செய்து வைக்கக் கோரியுள்ளார்.
முன்னதாக திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழும் இவர், தனது குடும்ப நண்பரின் 18 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவியை திருமணம் செய்து வைக்கக்கோரி கடந்த 2 மாதமாக வற்புறுத்தியுள்ளார்.
அவரது வற்புறுத்துதலுக்கு யாரும் செவிமடுக்காத நிலையில் விரக்தியடைந்த திருமுருகன், நேற்று (நவ.17) அந்த மாணவியின் வீட்டுக்கு பெட்ரோல் கேனுடன் சென்று திருமணம் செய்து வைக்க வற்புறுத்தியுள்ளார். மாணவியின் குடும்பத்தார் ஒத்துழைக்காத காரணத்தால் பெட்ரோலைத் தன் மீது ஊற்றிய திருமுருகன் தன்னையேக் கொளுத்திக் கொண்டார்.
உயிருடன் எரிந்து வலியால் துடித்துக் கொணடிருந்த திருமுருகன் மீதிருந்த நெருப்பை அப்பகுதியினர் அணைத்தனர்.
அருகிலிருந்தவர்கள் காவல் நிலையத்துக்கு இது தொடர்பாக தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல் துறையினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சுமாராக 25 விழுக்காடு தீக்காயங்களோடு அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.
தீக்குளித்த திருமுருகனின் தந்தை 141 வார்டு திமுக துணை வட்ட செயலாளர் சோமசுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கைது செய்ய வந்த போலீஸாரை கொலை செய்ய முயற்சித்த குற்றவாளி