சென்னை, ஆர்.கே. நகர் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும், ஜே.ஜே.எபிநேசர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கு முன் பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அப்பொழுது வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாவட்டத் தலைவர் திரு.M.S. திரவியம் தலைமையில், ஆர்.கே.நகர் தொகுதி காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் சொந்தங்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுக வேட்பாளர் எபிநேசர் வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற முடியாது என எபிநேசர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஐ.ஜி முருகன் உள்ளிட்ட 10 போலீசார் மாற்றம்