சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.
இந்நிலையில் நாளை(மார்ச்.4) நடைபெற உள்ள மாநகராட்சி மன்ற மேயர், துணை மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் பட்டியல்
1. சென்னை மாநகராட்சி
மேயர் - ஆர். பிரியா
துணை மேயர் - மகேஷ் குமார்
2. மதுரை மாநகராட்சி
மேயர் - இந்திராணி
3. திருச்சி மாநகராட்சி
மேயர் - அன்பழகன்
துணை மேயர் - திவ்யா தனுஷ்கோடி
4. திருநெல்வேலி மாநகராட்சி
மேயர் - சரவணன்
துணை மேயர் - ராஜூ
5. கோவை மாநகராட்சி
மேயர் - கல்பனா
துணை மேயர் - வெற்றிச்செல்வன்
6. சேலம் மாநகராட்சி
மேயர் - ராமச்சந்திரன்
7. திருப்பூர் மாநகராட்சி
மேயர் - தினேஷ் குமார்
8. ஈரோடு மாநகராட்சி
மேயர் - நாகரத்தினம்
துணை மேயர் - செல்வராஜ்
9. தூத்துக்குடி மாநகராட்சி
மேயர் - ஜெகன்
துணை மேயர் - ஜெனிட்டா செல்வராஜ்
10. ஆவடி மாநகராட்சி
மேயர் - உதயகுமார்
11. தாம்பரம் மாநகராட்சி
மேயர் - வசந்தகுமாரி கமலகண்ணன்
துணை மேயர் - காமராஜ்
12. காஞ்சிபுரம் மாநகராட்சி
மேயர் - மகாலட்சுமி யுவராஜ்
13. வேலூர் மாநகராட்சி
மேயர் - சுஜாதா அனந்தகுமார்
துணை மேயர் - சுனில்
14. கடலூர் மாநகராட்சி
மேயர் - சுந்தரி
15. தஞ்சாவூர் மாநகராட்சி
மேயர்- சண். ராமநாதன்
துணை மேயர் - அஞ்சுகம் பூபதி
16. கும்பகோணம் மாநகராட்சி
துணை மேயர் -தமிழழகன்
17. கரூர் மாநகராட்சி
மேயர் - கவிதா கணேசன்
துணை மேயர் - தாரணி பி. சரவணன்
18. ஓசூர் மாநகராட்சி
மேயர் - சத்யா
துணை மேயர் - ஆனந்தய்யா
19. திண்டுக்கல் மாநகராட்சி
மேயர் - இளமதி
துணை மேயர் - ராஜ்ப்பா
20. சிவகாசி மாநகராட்சி
மேயர் - சங்கீதா இன்பம்
துணை மேயர் - விக்னேஷ் பிரியா
21. நாகர்கோவில் மாநகராட்சி
மேயர் - மகேஷ்
துணை மேயர் - மேரி பிரின்சி
இதையும் படிங்க: கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரசுக்கு... திமுக கூட்டணி போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு...