ETV Bharat / state

‘மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை திமுக, காங்கிரஸ் உருவாக்குகிறது’ - பொன். ராதாகிருஷ்ணன் - DMK and Congress are creating an environment people are not safe

சென்னை: மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்படுத்துவதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

pon-radhakrishnan
pon-radhakrishnan
author img

By

Published : Dec 30, 2019, 8:29 AM IST

சென்னை அடையாறில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்படுத்தி வருகின்றன. வேண்டுமென்றே இந்து, இஸ்லாமியர்களிடையே மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் செயல்பட்டு வருகின்றனர். பேருந்து, ரயில்களை எரித்துதான் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகக் கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்து தெரிவிக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளது.

பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

அஸ்ஸாமில் இருக்கக்கூடிய பிரச்னைகள் வேறு, இலங்கை தமிழர்களுடைய பிரச்னைகள் வேறு. எல்லாவற்றையும் சேர்த்து முடிச்சு போடப் பார்க்கிறார்கள். மேலும் நமது நாட்டில் இரட்டைக்குடியுரிமை கொடுப்பதற்கான உரிமை இருக்கிறதா என்று எனக்கே தெரியாது’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'பொறாமைத் தீயில் வெந்துபோயிருக்கிறார் மு.க. ஸ்டாலின்...!'

Intro:தமிழ்நாட்டில் பிணக் குவியல்கள் கிடக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு திமுக செயல்படுகிறது பொன் .ராதாகிருஷ்ணன் பேட்டி.Body:நடிகர் விஜய் ஆண்டனி தமிழரசன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை அடையாறில் நடைபெற்றது இந்த விழாவில் கலந்துகொண்ட பொன் ராதாகிருஷ்ணன் விழாவிற்கு பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டது. குறித்து எனக்கு தெரியாது.வதந்தியை பரப்புவது எந்த அளவிற்கு குற்றம் என்பது நம் அனைவருக்கும் தெரியும் .அந்தவகையில் பொய்யான தகவலை சொல்லி வதந்தியை கிளப்புவார்கள் கொலைகாரர்களுக்கு சமம்

மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை திமுகவும் காங்கிரசும் ஏற்படுத்தி வருகிறது.
இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் அரசியல்ரீதியாக காங்கிரசும் திமுகவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

ஒரு அரசியல் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதை விட கலவரத்தை மூட்டும் விதமாக போராட்டத்தில் இறங்கி உள்ளனர்

தமிழ்நாட்டில் பிணக் குவியல்கள் கிடக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு அவர்கள் செயல்படுவதாகவும் கூறினார்

ஒரு சிலையை அவமதிப்பு அதனால் அவர்களின் சிந்தனையை அவமதித்து விடலாம் என்று நினைப்பது தப்பான விஷயம் என காமராஜர் சிலை அவமதிப்பு குறித்து கருத்து தெரிவித்தார்

இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது வித்தியாசமான ஒன்று. அங்கே வாழ முடியாமல் அவர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

இலங்கை தமிழர்கள் இலங்கையை வெறுத்து வரவில்லை. அவர்கள் மீண்டும் இலங்கைக்கு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் தான் வந்துள்ளனர். அப்படிப்பட்டவர்களை இலங்கைக்கு நீங்கள் போக கூடாது என்று சொல்ல எந்த கட்சிக்கும் உரிமை இல்லை என தெரிவித்தார்.அதேபோல தற்பொழுதுள்ள ராஜபக்சேவின் அரசு எப்படி பட்ட அரசு என்பது உங்களுக்கு தெரியும்
அமைதியான சூழலை கொண்டு அவர்களை மீண்டும் அழைப்பது என்பது இரு நாட்டின் கருத்தை ஒத்ததாகும்

கன்னியாகுமரியில் அகதிகள் முகாமில் உள்ளவர்களிடம் கேட்க இரட்டை குடியுரிமை குறித்து கருத்து கேட்க சென்ற இரண்டு செய்தியாளர்களை கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து பேசிய அவர்,

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று யாரையும் சொல்லவில்லை ஆனால் பேருந்துகளை ரயிலையும் எரித்து தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற சூழல் கிடையாது கருத்து தெரிவிக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்

அசாமில் இருக்கக்கூடிய என்னுடைய பிரச்சனைகள் வேறு இலங்கை தமிழர்களுடைய பிரச்சினைகள் வேறு எல்லாவற்றையும் சேர்த்து ஒரு முடிச்சு போடப் பார்க்கிறார்கள் அப்படி இல்லை என விளக்கம் அளித்தார். மேலும் நமது நாட்டில் இரட்டைக்குடியுரிமை கொடுப்பதற்கான உரிமை இருக்கிறதா என்று தனக்கே தெரியவில்லை என கூறினார்.

Conclusion:பேட்டி மோஜோ வில் அனுப்பியுள்ளேன்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.