ETV Bharat / state

'பத்திரிகையாளர்களுடன் எப்போதும் திமுக துணை நிற்கும்' - ஸ்டாலின் - MK stalin

சென்னை: கரோனா ஊரடங்கால் அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளைக் குறைக்க மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருக்கும் பத்திரிகையாளர்களுடன் திமுக துணை நிற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK stalin
MK stalin
author img

By

Published : May 19, 2020, 4:42 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில், அச்சு ஊடகங்களான நாளிதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இதுகுறித்து, பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை என்னுடைய கவனத்திற்கும் பத்திரிகையாளர்கள் கொண்டு வந்தனர். அச்சு ஊடகங்கள் வழக்கம்போல மக்களின் குரலாகச் செயல்படுவதற்கு திமுக துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டாலினைச் சந்தித்த பத்திரிகை உரிமையாளர்கள்
ஸ்டாலினைச் சந்தித்த பத்திரிகையாளர்கள்
மத்திய அரசு, பத்திரிகை அச்சுக் காகிதம் மீதான வரியைக் குறைக்க வேண்டும், அரசு விளம்பரங்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வைத்துள்ள நிலுவைத் தொகையை உடனடியாகப் பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டும், காலத்தின் தேவை கருதி அரசு விளம்பரக் கட்டணத்தை நூறு விழுக்காடு அளவிற்கு உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பத்திரிக்கையாளர்கள் முன்வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் இறந்தால் ரூ.15 லட்சம் இழப்பீடு - ஒடிசா அரசு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.