முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல்செய்துள்ள மனுவில், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரோனா பாதிப்பு நிவாரணங்கள் மக்களுக்குச் சரியாகச் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டையும் திமுக தொடர்ந்து முன்வைத்துவருகிறது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 31) மாலை 4.30 மணி அளவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டபிரிவினருக்கான (OBC) இடஒதுக்கீட்டை மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், கரோனா நோய் தடுப்பில் மத்திய, மாநில அரசின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு!