தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில், தேமுதிகவின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் தங்களின் விருப்ப மனுக்களை நாளை காலை 10 மணியிலிருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை நவ. 25ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் மட்டுமே தகுதியானவர்கள்.
கட்டணத் தொகை பின்வருமாறு:
- மாநகராட்சி மேயர் - ரூ. 15,000
- மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர் - ரூ.4,000
- நகராட்சி மன்ற தலைவர் - ரூ. 7,000
- நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் - ரூ.1,500
- பேரூராட்சி மன்ற தலைவர் - ரூ.4,000
- பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் - ரூ.1,000
- மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் - ரூ.4,000
- ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் - ரூ.2,000
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்
Intro:Body:
தேதி: 14.11.2019
உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிடவிருப்ப மனு வழங்குதல் சம்பந்தமாக,
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர்
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அறிவிப்பு
தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2019 உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை 15.11.2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியில் இருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 25.11.2019 திங்கட்கிழமை மாலை 5 மணிக்குள் மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள்.
கட்டணத் தொகை:
மாநகராட்சி மேயர் - 15,000/-
மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர் - 4,000/-
நகராட்சி மன்ற தலைவர் - 7,000/-
நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் - 1,500/-
பேரூராட்சி மன்ற தலைவர் - 4,000/-
பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் - 1,000/-
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் - 4,000/-
ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் - 2,000/-
தேசிய முற்போக்கு திராவிட கழகம்
நிறுவனத்தலைவர் / பொதுச்செயலாளர்
Conclusion: