ETV Bharat / state

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தேமுதிக முப்பெரும் விழா...மகிழ்ச்சியில் விஜயகாந்த் ஆதரவாளர்கள்!

சென்னை: விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவின் முப்பெரும் விழா, திருப்பூரில் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது

vijayakanth
author img

By

Published : Aug 18, 2019, 6:45 PM IST

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி, தனது 67ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். மேலும் தேமுதிக கட்சி வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி தனது பயணத்தை 15ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் விஜயகாந்த் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை. அவரின் கம்பீரப்பேச்சை கேட்க முடியாமல் தொண்டர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். அவரின் மனைவி மற்றும் மகன் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதெல்லாம் தொண்டர்கள் கேட்கின்ற கேள்வி, கேப்டன் எப்படி இருக்கிறார்? எப்போது கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்? என்பதே.

இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதிலாக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் தேமுதிக தலைமைக் கழகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விஜயகாந்தின் பிறந்த நாள் விழா, கட்சியின் 15ஆவது ஆண்டு துவக்க விழா மற்றும் அதனையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என மூன்று விழாக்களை ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் திருப்பூரில் செப்டம்பர் 15ஆம் தேதி நடத்தயிருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Intro:Body:

DMDK mupperum Vizha

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.