தீபாவளி பண்டிகை அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு 1,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களில் பயணச்சீட்டு முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று முன்பதிவு தொடங்கியிருக்கிறது. www.tnstc.in, www.redbus.in மற்றும் www.paytm.in ஆகிய இணையதளங்களில் பொதுமக்கள் அனைவரும் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுவது குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.