சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையடுத்து, தமிழகத்தின் தொழில் நகரங்களான சென்னை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது என்று தெற்கு இரயில்வே அறிவித்து இருந்தது.
-
#SouthernRailway to operate Deepavali Festival Specials between Nagercoil and Tambaram
— Southern Railway (@GMSRailway) November 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Advance Reservation for the Festival Specials will open at 08.00 am on 02nd November, 2023
Link : https://t.co/8FQdxXFOrC #DeepavaliFestivalSpecial pic.twitter.com/bYuM7Tu3kp
">#SouthernRailway to operate Deepavali Festival Specials between Nagercoil and Tambaram
— Southern Railway (@GMSRailway) November 1, 2023
Advance Reservation for the Festival Specials will open at 08.00 am on 02nd November, 2023
Link : https://t.co/8FQdxXFOrC #DeepavaliFestivalSpecial pic.twitter.com/bYuM7Tu3kp#SouthernRailway to operate Deepavali Festival Specials between Nagercoil and Tambaram
— Southern Railway (@GMSRailway) November 1, 2023
Advance Reservation for the Festival Specials will open at 08.00 am on 02nd November, 2023
Link : https://t.co/8FQdxXFOrC #DeepavaliFestivalSpecial pic.twitter.com/bYuM7Tu3kp
இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைக்கான முன்பதிவு இன்று (நவ. 2) தொடங்கியது. வண்டி எண் 06012 நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் நவம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
அதேபோல் மறுமார்க்கமாக வண்டி எண் 06011 தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில், நவம்பர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.45 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும் என தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று (நவ. 2) காலை 8 மணி முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தற்போது முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: ரயில் மோதி யானைகள் உயிரிழப்பை தவிர்க்க திட்டம்! ரயில் பாதைகளில் செயற்கை நுண்ணறிவு கேமரா பொருத்தி சோதனை!