சென்னை: தீபாவளி தினமான நேற்று (அக். 24) தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் காலையில் 1 மணி நேரமும் இரவில் 1 மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதி கொடுத்திருந்தாலும், நேற்று முழுவதும் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெடிகளின் சத்தம் இருந்தது. காற்றின் மாசு அளவை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தது. பெரும்பாலான இடங்கள் குப்பையாகவும் மாலையில் இருந்து இரவு வரை சென்னையின் பல பகுதிகள் புகை மண்டலமாகவும் காட்சியளித்தது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் பட்டாசு வெடிக்க சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதாவது காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும், மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. எனினும் பட்டாசுகள் வெடிப்பு சத்தம் நேற்று காலை முதலே கடுமையான ஒலியுடன் கேட்க தொடங்கியது. இதன் தாக்கமாக காற்றில் புகை எழுந்த வண்ணமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சென்னை நகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இல்லாமல் இருந்த வெடியின் சத்தம் நேற்று காலை முதலே கேட்க தொடங்கியது. காற்றின் மாசுபாடு சில பகுதிகளில் அதிகமாகவே இருந்தது என்று சொல்லலாம். காற்று மாசு பல இடங்களில் 200 ppb புள்ளிகளை தொட்டது. சென்னையில் முக்கியப் பகுதிகளில் காற்றின் மாசுபாடு அதிகமாக இருந்துள்ளது என மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. கொடுங்கையூரில் மட்டும் மாசுபாடு குறைவாக இருந்தது என தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: இரட்டை குழந்தை விவகாரம்... நாளை மாலை அறிக்கை... மா.சுப்பிரமணியன் தகவல்..