தமிழ்நாட்டில் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் உள்ளாட்சிகளுக்கான தேர்தலை மாவட்டங்கள் தோறும் பார்வையிட தேர்தல் பார்வையாளர்களை நியமித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன் விவரம் பின் வருமாறு: அரியலூர் மாவட்டம் - ராஜசேகர், கோயம்புத்தூர் - கோவிந்தராஜ், கடலூர் - முனியநாதன், தருமபுரி - ராஜேஷ், திண்டுக்கல் - சண்முகம், ஈரோடு விவேகானந்தன், கன்னியாகுமரி - நாகராஜ், கரூர் - வெங்கடாச்சலம், கிருஷ்ணகிரி - ஆப்ரகாம், மதுரை - சுப்பையன், நாகப்பட்டினம் - தட்சிணாமூர்த்தி, நாமக்கல் - ஜகன்நாதன், பெரம்பலூர் - அனில்மேஸ்ராம், புதுக்கோட்டை - அமிர்தஜோதி, ராமநாதபுரம் - அதுல் ஆனந்த், சேலம் - காமராஜ், சிவகங்கை - கருணாகரன், தஞ்சாவூர் - அனிஸ் சேகர், நீலகிரி - ஜோதிநிர்மலாசாமி, தேனி - ஆசியா மரியம், தூத்துக்குடி - சம்பத், திருச்சி - லட்சுமி, திருப்பூர் - கஜலட்சுமி, திருவள்ளுவர் - ஞானசேகரன், திருவண்ணாமலை - சுந்தரவல்லி, திருவாரூர் - கவிதாராமு, விருதுநகர் - அமுதவல்லி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வார்டு மறுவரையறையில் குளறுபடி - தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு!