ஈரோடு: மாவட்டத்தில் கரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றனர்.
மேலும் சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கை கழுவுதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவை குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து மூன்றாவது அலையை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர் கைது