ETV Bharat / state

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் விநியோகம்

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், பயணம் செய்யும் பொருட்டு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் இன்று (பிப். 15) முதல் விநியோகம் செய்யப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Distribution of free travel tokens to senior citizens

author img

By

Published : Feb 15, 2021, 12:15 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் 2016ஆம் ஆண்டு 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், பயணம் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அதனடிப்படையில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள், 60 வயது நிறைவு மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையங்கள், பணிமனைகளை அணுகி, மாதம் ஒன்றுக்கு 10 டோக்கன்கள் வீதம் மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்துகின்ற வகையில் கட்டணமில்லா பயண டோக்கன்களைப் பெற்றுவந்தனர்.

மூத்த குடிமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்தின் வாயிலாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் ஏறத்தாழ மூன்று லட்சத்து 51 ஆயிரத்து 617 பேர் பயனடைந்துள்ளனர். பின்னர் கரோனா தொற்று காரணமாக பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும், மூத்த குடிமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

பின்னர், கரோனா கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து, பேருந்துகள் 100 விழுக்காடு இருக்கைகளுடன் அனுமதிக்கப்பட்டன. இதற்கு அடுத்தகட்டமாக, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் பொருட்டு, அவர்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தப் பயணத்திற்கான டோக்கன்களைப் பெற தகுதிவாய்ந்த மூத்த குடிமக்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து இன்றுமுதல் அலுவலக நாள்களில் காலை 8.00 மணி தொடங்கி இரவு 7.30 மணி வரையில், மாதம் ஒன்றுக்கு 10 வீதம் பிப்ரவரி முதல் ஜூலை வரை மாதங்களுக்கான டோக்கன்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

புதியதாக விண்ணப்பிக்க விரும்புவோருக்கான விண்ணப்பப்படிவம் அந்தந்த மையங்களில் வழங்கப்படும். மேலும், மாநகர் போக்குவரத்துக் கழக வலைதள முகவரியான, www.mtcbus.tn.gov.in-இல் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

விண்ணப்பம் அளிக்கும்போது வயது, இருப்பிடச் சான்றுக்கான வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை அல்லது பள்ளிச் சான்றிதழ் போன்ற ஆவணங்களின் நகல் இணைக்கப்பட வேண்டும். பாஸ்போர்ட் அளவு தற்போதைய இரண்டு புகைப்படங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

கட்டணமில்லா டோக்கன்களில் அச்சடித்துள்ள மாதத்திற்கு மட்டுமே அந்தந்த டோக்கன்கள் செல்லுபடியாகும். குறிப்பிட்ட மாதம் கடந்துவிட்டால் அந்த டோக்கன்கள் காலாவதியானதாகக் கருதப்படும். மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து வசதி மூலம் சென்னை மாநகர் பேருந்துகளில், இரவு நேரப் பேருந்துகள் உள்பட அனைத்துப் பேருந்துகளிலும் (குளிர்சாதனப் பேருந்து நீங்கலாக) பயணம் செய்யலாம்.

இந்த டோக்கன்கள் அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி, தி.நகர், சைதாப்பேட்டை, மத்திய பணிமனை, குரோம்பேட்டை-1, ஆலந்தூர், அய்யப்பன் தாங்கல், வடபழனி, கே.கே. நகர், ஆதம்பாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி, அயனாவரம், தண்டையார் பேட்டை-1, எண்ணூர், வியாசர்பாடி, மாதவரம், பாடியநல்லூர் பணிமனைகளில் வழங்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, சென்ட்ரல் ரயில் நிலையம், பிராட்வே, பல்லாவரம், தாம்பரம்-மெப்ஸ் பேருந்து நிலையம், கிண்டி எஸ்டேட், பூவிருந்தவல்லி, வேளச்சேரி, அம்பத்தூர் ஓடி, வில்லிவாக்கம், பெரம்பூர், திருவொற்றியூர், சுங்கச்சாவடி, வள்ளலார் நகர், எம்.கே.பி. நகர், செங்குன்றம், செம்மஞ்சேரி, சைதாப்பேட்டை, பெசன்ட் நகர் ஆகிய பேருந்து நிலையங்களிலும் வழங்கப்படுகிறது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.