மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை மும்மொழி கல்வியை வலியுறுத்துகிறது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே தொடரும் என முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் புதிய கல்விக் கொள்கை பற்றி ஆராய குழு அமைக்கப்படும் என்றும், அந்த குழுவின் அறிவுரையின்படி இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியிருந்தார்.
அதன்படி, பல்கலைக் கழக துணை வேந்தர்கள் உள்ளிட்ட ஏழு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசிக்க டெல்லி ராஜ்பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், உயர் கல்வித்துறை செயலர் ஆகியோர் சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து காணொலி வாயிலாக கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா குறித்த ஆய்வு முடிவுகள் ஆளுநர் கிரண் பேடி கையில் ஒப்படைப்பு!