ETV Bharat / state

தள்ளுபடி விலையில் ரயில் டிக்கெட்:  பயணிகளை ஈர்க்கும் ரயில்வே வாரியம். - high quality train ticket

சென்னை: ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ போன்ற உயர் ரக சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் விலையில் தள்ளுபடி வழங்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

தள்ளுபடி விலையில் ரயில் டிக்கெட்:  பயணிகளை ஈர்க்கும் ரயில்வே வாரியம்...
தள்ளுபடி விலையில் ரயில் டிக்கெட்:  பயணிகளை ஈர்க்கும் ரயில்வே வாரியம்...
author img

By

Published : Nov 12, 2020, 9:15 PM IST

பண்டிகை காலத்தில் மக்கள் கூட்டம் குறைவாக உள்ள உயர்ரக ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டிக்கெட் விலையில் தள்ளுபடி வழங்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.

ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தும். குறிப்பிட்ட ரயில்கள் புறப்படுவதற்கு 1-4 நாட்களுக்கு முன்பாக மக்கள் பயன்பாட்டை பொருத்து கட்டண குறைப்பு செயல்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக ஒரு ரயில் 15 ஆம் தேதி புறப்படுகிறது என்றால் 11 முதல் 14 வரையிலான நான்கு நாட்களில் அந்த ரயிலில் முன்பதிவு நிலவரத்துக்கு ஏற்ற வகையில் டிக்கெட் விலையில் தள்ளுபடி வழங்கப்படும்.

இந்த ரயில்களில், ஏசி இருக்கை பெட்டி மற்றும் மூன்றாம் வகுப்பு ஏசி வகுப்பு ஆகியவற்றில் பயணிப்பவர்களுக்கு இந்த தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் 60 விழுக்காடு இருக்கைகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் 20 விழுக்காடு வரை டிக்கெட்டில் தள்ளுபடி வழங்கப்படும். அதேபோல், ரயிலில் பயணிகள் எண்ணிக்கை 70 முதல் 80 விழுக்காடு வரை இருந்தால் டிக்கெட் கட்டணத்தில் 10 விழுக்காடு ரத்து செய்யப்படும்.

80 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பயணிகள் குறிப்பிட்ட ரயிலில் முன்பதிவு செய்திருந்தால் அதற்கு கட்டண சலுகைகள் வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது. இந்த கட்டண தள்ளுபடி ரயில் கட்டணத்தின் ஆதார விலையில் மட்டுமே வழங்கப்படும் என்றும், முன்பதிவுக் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி ஆகிவற்றுக்கு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் சலுகை பெற பயணிகள் தனியாக தேர்வு ஏதுவும் செய்யத் தேவையில்லை என்றும், முன்பதிவு நிலவரத்துக்கு ஏற்ப கட்டணம் தானாக குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலைய முன்பதிவு நிலையம் மற்றும் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்பவர்கள் என இரு தரப்பினருக்கும் கட்டண சலுகை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 15ஆம் தேதி முதல் இந்த ஆண்டு இறுதி வரை அதாவது (31.12.2020) வரை இந்த கட்டண சலுகை அமலில் இருக்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்கள் உயர்ரக ரயில்களில் பயணிப்பது குறைந்துள்ள நிலையில், அவர்களை ஈர்க்கும் விதமாக கட்டண சலுகையை ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.