ETV Bharat / state

திமுக எம்பி வில்சன் மீது பார் கவுன்சிலில் புகார்!

திமுக எம்பியும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் மீது தொழில் நடத்தை விதிமுறை மீறலுக்காக நடவடிக்கை எடுக்க கோரி பார் கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

disciplinary-action-against-dmk-advocate-wilson-petition-to-bar-council
திமுக எம்பி வில்சன் மீது பார் கவுன்சிலில் புகார்!
author img

By

Published : Aug 18, 2021, 9:53 PM IST

சென்னை: சென்னையைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில், திமுக எம்பியும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில், மூத்த வழக்கறிஞரான வில்சன் உள்ளிட்ட 30 மூத்த வழக்கறிஞர்களை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் எழும் வழக்குகளில் தமிழ்நாடு அரசு சார்பில் வாதாட பணியமர்த்துவதாக தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 4ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.

கடந்த 11ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் நிர்மல்குமார் அமர்வு முன்பாக தமிழ்நாடு அரசுக்கு எதிரான வழக்கு ஒன்றில் வில்சன் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் ஆஜராகியுள்ளார்.

disciplinary-action-against-dmk-advocate-wilson-petition-to-bar-council
திமுக எம்பி வில்சன் மீது பார் கவுன்சிலில் புகார்

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரான மா. சுப்பிரமணியம் தன்மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கினை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கில், அமைச்சர் தரப்பிலும் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆஜராகியது முரணானது.

மகன் அரசு வழக்கறிஞர்

மேலும், இவ்வழக்கின் விசாரணை பட்டியலில் பி. வில்சன் அசோசியேட்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் அவரது மகனான ரிச்சர்ட் வில்சனும் பங்குதாரராக உள்ளார். இந்த ரிச்சர்ட்சன் வில்சன் தற்போது அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

மகன் ரிச்சர்ட்சன் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞராக உள்ள நிலையில் அவரது தந்தையான பி. வில்சன் குற்றவாளிகள் தரப்பில் ஆஜராவது என்பது சட்ட நெறிகளுக்கு எதிரானது. மேலும், இது வழக்கறிஞர் சட்டம் 1961ன் படிதொழில் நடத்தை விதிமுறை மீறல் ஆகும்.

எனவே, பி. வில்சன் மீது தொழில் நடத்தை விதிமுறை மீறலுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனக் கோரியுள்ளார்.

இதையும் படிங்க: சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அலுவலக வளாக கட்டடத்தை இடிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.