சென்னை: பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 13 காவலர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதிகளவில் நீர் தேங்கியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேளச்சேரி, சொக்கலிங்கம் நகரில் வீட்டில் மழை நீரில் சிக்கிய ஒன்பது மாத கர்ப்பிணி ஜெயந்தி என்பவரை படகு மூலம் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
மீட்புக் குழுவினர்
மேலும் அப்பகுதியில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த 50க்கும் மேற்பட்டவர்களை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
ஓட்டேரியை சேர்ந்த ஏழுமலை என்பவர் நல்லா கால்வாயில் நீர் செல்வதை பார்க்க சென்ற போது வலிப்பு ஏற்பட்டு கால்வாய்க்குள் விழுந்தார். இதனை கண்ட சுதாகர் என்ற இளைஞர் அவரை காப்பாற்ற கால்வாயில் குதித்துள்ளார். கால்வாயில் அதிகமான தண்ணீர் சென்றதால் சுதாகர் நீரில் அடித்து செல்லப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து செயல்பட்டு கால்வாய் நீரில் அடித்து செல்லப்பட்ட சுதாகரை பத்திரமாக மீட்டனர். வலிப்பு ஏற்பட்டு கால்வாயில் விழுந்த ஏழுமலையை தேடி வருகின்றனர்.
முகாம்கள்
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குவதற்காக பல்வேறு இடங்களில் அரசு சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: முதியவரை காப்பாற்ற சென்று ஆற்றில் சிக்கிய இளைஞர் - பத்திரமாக மீட்ட காவல்துறையினர்