ETV Bharat / state

தமிழகம், புதுச்சேரியில் நாளை செல்போனில் அபாய ஒலி வந்தால் அச்சமடைய வேண்டாம்.. காரணம் இது தான்!

Emergency Alert Warning Test: பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக செல்போன்கள் மூலம் எச்சரிக்கை செய்யும் சோதனை நாளை(அக்.20) மேற்கொள்ளப்பட உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 7:32 PM IST

சென்னை: தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இயக்குநர் இன்று (அக்.19) வெளியிட்ட தகவலில், 'தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையுடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசரக்கால தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் 'செல் ஒலிபரப்பு எச்சரிக்கை' சோதனை ஓட்டம் எதிர்வரும் நாளை (அக்.20) நடத்தப்பட உள்ளது.

'செல் ஒலிபரப்பு எச்சரிக்கை முறை' என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும். இதில் ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்பேசிகளுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி உள்ளது. சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற கடுமையான வானிலை எச்சரிக்கைகள், பொது பாதுகாப்பு செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரக்கால எச்சரிக்கைகளை வழங்க செல் ஒலிபரப்பு எச்சரிக்கை பயன்படுத்தப்பட உள்ளது. இத்தொழில்நுட்பம் பேரிடர் எச்சரிக்கை தகவல்கள், சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளைப் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பரவலாகத் தெரிவிக்கப் பயன்படுத்தப்பட உள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பில் தொடர்ச்சியான உறுதிப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரிடமும் செல் ஒலிபரப்பு எச்சரிக்கை அமைப்பின் சோதனையினை நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடத்த உள்ளது.

சோதனை காலத்தில், பொதுமக்களின் செல்போன்களில் அவசர எச்சரிக்கைகள் பெறப்படும். இந்த விழிப்பூட்டல்கள் திட்டமிட்ட சோதனை செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். உண்மையான அவசரநிலையைக் குறிக்கவில்லை. இந்த சோதனை ஓட்டத்தால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை; இதற்கு எதிர்வினை ஆற்றவேண்டாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேவர் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கேட்டு வழக்கு: நீதிமன்றம் கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.