விழித்திறன் இழந்த கல்லூரி மாணவர்கள், பட்டதாரி சங்கத்தினர் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையகத்தில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (பிப்.19) சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் உள்ள ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கையை ஆதரித்து திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, துரைமுருகன் பேசினர்.
அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் இருந்து வெளியே வந்த மாற்றுத்திறனாளிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து முற்றிலும் பாதிரக்கப்பட்டது. இதையடுத்து, மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி ராமு, ராஜேஸ்வரி கூறும்போது, "ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். உதவிப் பேராசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான விழித்திறன் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமனம் உடனடியாக வழங்க வேண்டும்.