ETV Bharat / state

நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் வீட்டினை ஜப்தி செய்ய நடவடிக்கை?! - இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்

இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரின் சாலிகிராமத்தில் உள்ள வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வீடு ஜப்தி செய்ய நடவடிக்கை!

author img

By

Published : Aug 1, 2022, 7:56 PM IST

சென்னை: இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ’சட்டப்படி குற்றம்’ திரைப்படத்தின் விளம்பரச்செலவு 76 ஆயிரத்து 122 ரூபாயை வழங்காததையடுத்து, விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன், சென்னை அல்லிகுளம் 25ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வீடு ஜப்தி செய்ய நடவடிக்கை!

சட்டப்படி குற்றம் என்ற திரைப்படத்தை விளம்பர பெய்ய சரவணன் என்பவரின் தமிழ்நாடு விஷூவல் சிசிடிவி அட்வர்டைஸ்மென்ட் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளார். ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் விளம்பரம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதற்காக ரூ.40,000 முன்பணமாக கொடுத்துள்ளார். ஆனால், படம் வெளியாகி தோல்வியடைந்ததால் மீதி பணத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தரமறுத்துள்ளார். இதுகுறித்து கடந்த 2014ஆம் ஆண்டு சரவணன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

வழக்கு விசாரணையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அலுவலகப்பொருட்களை ஜப்தி செய்ய எழும்பூர் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து இன்று பொருட்களை நீதிமன்ற அனுமதியுடன் ஜப்தி செய்ய சென்றுள்ளனர். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் இவரைத் தடுத்துள்ளனர்.

இதனால் காவல்துறை உதவி கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் பாதுகாப்புடன் பொருட்களை ஜப்தி செய்ய உள்ளதாக சரவணன் தரப்பு வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வனக்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு உதவிகள் வழங்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.