ETV Bharat / state

இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை... சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

நடிகர் கார்த்தி நடித்த படத்தைத் தயாரிப்பதற்காக பெற்ற 1 கோடி ரூபாயைத் திரும்ப செலுத்தாத வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத காலங்கள் சிறைத்தண்டனை விதித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை - சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Aug 22, 2022, 3:33 PM IST

சென்னை: கடந்த 2014இல் நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் "எண்ணி ஏழு நாள்" படத்தைத் தயாரிப்பதற்காக, ’நான் ஈ’, ’இரண்டாம் உலகம்’ போன்ற படங்களை தயாரித்த பி.வி.பி. பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து 1 கோடியே 3 லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக இயக்குநர் லிங்குசாமி கடனாகப்பெற்றுள்ளார்.

அப்போது, லிங்குசாமி கொடுத்த 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை, வங்கிக்கணக்கில் பணமில்லாமல் திரும்பியதால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் இன்று(ஆக.22) உத்தரவு பிறப்பித்த 3ஆவது விரைவு நீதிமன்றம், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் லிங்குசாமி தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அனைத்து சமூகத்தினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கான அரசின் உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்தது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.