ETV Bharat / state

'ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்க கூடாது..!' - இயக்குநர் கவுதமன்

சென்னை: "விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்க கூடாது" என்று, இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கவுதமன்
author img

By

Published : May 19, 2019, 5:20 PM IST

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

தமிழ்நாட்டின் வளத்தினை கொள்ளையடிப்பதில் மத்தியிலுள்ள மோடி அரசு ஈவு இரக்கமின்றி நடந்து வருகிறது. உழவுத் தொழிலை திட்டமிட்டு தமிழகத்தில் அழிப்பது எந்தவிதத்திலும் நியாயமாகாது. ராக்கெட்டில் சென்றாலும் தண்ணீர் குடிப்பதற்கு தரைக்குதான் வரவேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம் 5000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 600 எண்ணெய் கிணறுகள் தோண்டி இயங்கிக் கொண்டு வருகின்றன. அதேபோல் நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பெட்ரோலிய பொருட்கள் எடுப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மாநில அரசு இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என ஆரம்ப நிலையிலேயே தடைவிதிக்க வேண்டும்.

காவிரி டெல்டா பகுதிகளில் எண்ணைய் குழாய் அமைப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசிற்கு எதிராக தடைவிதித்து அரசாணை வெளியிட்டுள்ளார். அந்த தடையை நீக்கியது யார்? என்பதை அரசு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். வேதந்தா நிறுவனம் மக்களிடம் சென்று அனுமதி பெறாமல், மத்திய அரசிடமும் முழு அனுமதி பெற்றுள்ளது. இதற்கு மாநில அரசு ஒருபோதும் சம்மதம் தெரிவிக்கக்கூடாது, என்றார்.

Intro:நாகப்பட்டினம் விழுப்புரம் கடலூர் மாவட்டத்தில்
வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது

Body:சென்னை, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கவுதமன், தமிழ்நாட்டின் வளத்தினை கொள்ளையடிப்பதில் மத்தியிலுள்ள மோடி அரசு ஈவு இரக்கமின்றி நடந்து வருகிறது. உழவு தொழிலை திட்டமிட்டு தமிழகத்தில் அழிப்பது எந்தவிதத்திலும் நியாயமாகாது. ராக்கெடில் சென்றாலும் தண்ணீர் குடிப்பதற்கு தரைக்கு தான் வரவேண்டும். நிலத்தில் உள்ள வளத்தினை கொள்ளையடிப்பதை இதன் பிறகும் பொறுத்துக் கொள்ள முடியாது.
நாகப்பட்டினம் மாவட்டம் நரிமனத்தில் விவசாயிகளின் அனுமதியின்றி விவசாய நிலத்தில் விளைந்த பயிர்களைக் ராட்சத இயந்திரங்களை கொண்டு அழித்துவிட்டு கெயில் நிறுவனம் பெரிய குழாய்களைப் பதிக்கிறது. இதற்கு யார் அனுமதி அளித்தது.
ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் ஓ என் சி சி நிறுவனத்தின் மூலம் 5000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 600 எண்ணெய் கிணறுகள் தோண்டி இயங்கிக் கொண்டு வருகின்றன.
அதேபோல் நாகப்பட்டினம் கடலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பெட்ரோலிய பொருட்கள் எடுப்பதற்கான பணிகளை நீங்கள் தொடங்கி உள்ளீர்கள். தொடைக்கு மட்டும்தான் உள்ளீர்கள்.
மத்திய அரசு தங்களை ஆரம்ப நிலையிலேயே திருத்திக் கொள்ள வேண்டும். மாநில அரசு இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என ஆரம்ப நிலையிலேயே தடைவிதிக்க வேண்டும்.
காவிரி டெல்டா பகுதிகளில் என்னை குழாய் நிறுவனங்கள் அமைப்பதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசிற்கு எதிராக தடைவிதித்த விதித்து அரசாணை வெளியிட்டுள்ளார். அந்த தடையை நீக்கியது யார்? என்பதை அரசு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
மத்திய அரசானது ஒற்றை அனுமதி திட்டத்திற்கு யாரிடம் அனுமதி பெற்றனர் என்பதை தெரிவிக்க வேண்டும். மேலும் வேதாந்தா நிறுவனம் மக்களிடம் செல்லாமல் நேரடியாக அரசின் முழு அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுள்ளதாகத் தெரிகிறது. அரசு இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது. தமிழக முதல்வரை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளேன்.
பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் இந்த திட்டத்தினை செயல்படுத்த கூடாது. தலைவர்கள் அறிக்கை விடுவதுடன் நிற்காமல் மக்களுடன் இறங்கி போராட வேண்டும்.
27ம் தேதி முதல்வரை சந்தித்த பின்னர் அவர் தடை உத்தரவு பிறப்பிக்க வில்லை என்றால் ஏற்கனவே போராடியது போல் இந்தப் பகுதிகளில் மக்களோடு மக்களாக இணைந்து போராடுவேன் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.