திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் (69) சென்னையில் காலமானார். காலை தேநீர் குடுக்க அவரது சமையலர் மேத்யூ எழுப்பும்போது அவர் மரணம் அடைந்தது தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்து பிரதாப் போத்தனின் கார் ஓட்டுநர் சுரேஷ் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்பு இருவரும் சேர்ந்து அப்பல்லோ மருத்துவமனையின் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அப்பல்லோ மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்ததில் பிரதாப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது, நாளை (ஜூலை 16) வேலங்காடு ஈடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இவரது வீட்டில் இவரது மனைவி அமலா மற்றும் மகள் கேயா ஆகியோர் உள்ளனர்.
இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரதாப் போத்தன், தான் இயக்கிய மீண்டும் ஒரு காதல் கதை படத்துக்காக தேசிய விருது பெற்றவர். தமிழ் திரையுலகில் முதல் முறையாக ஸ்டெடி கேமராவை பயன்படுத்தி, கமலின் வெற்றி விழா படத்தை இயக்கியவர் பிரதாப் போத்தன்.
ஜீவா, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களை இயக்கியுள்ளார். மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, பன்னீர் புஷ்பங்கள், நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற படங்களில் பிரதாப் போத்தன் நடித்துள்ளார்.
இதயும் படிங்க: டொனால்டு ட்ரம்ப்பின் முதல் மனைவி காலமானார்...