ETV Bharat / state

சோழர் கால விஷ்ணு கோயில் பராமரிப்பு வழக்கு - இந்த சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு!

சென்னை: சோழர்கள் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய விஷ்ணு கோயிலைக் காவலர்கள் கொண்டு பராமரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் இந்த சமய அறநிலையத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Jun 6, 2020, 5:45 PM IST

high court
high court

சென்னையைச் சேர்ந்த ஶ்ரீதரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ”நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திலுள்ள அருள்மிகு நான்மடிகை பெருமாள் கோயில் சோழ மன்னர்களான கேசரி வர்மா, ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்கியது.

தமிழ்ப் புலவர்களால் முதல் சங்கம் இங்கே தான் நடைபெற்றதாக நம்பப்படுகிறது. 108 விஷ்ணு திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறை தற்போது பராமரித்து வருகிறது. இந்தச் சிறப்புமிக்க கோயிலின் கோசாலைக்கு மாடுகள் தானமாக வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால், எவரும் தானம் செய்ய முன்வருவதில்லை. மேலும், பல்வேறு சமயங்களில் சிலைகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கோயில் உரிய பாதுகாப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது.

இந்து சமய அறநிலையத் துறை 4,000 ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், காவலர்களைப் பணியில் ஈடுபடுத்தியிருப்பதாக 2009ஆம் ஆண்டு அறிவித்தது. இந்தக் கோயிலுக்கு உரிய காவலர்கள் நியமிக்கப்படாததால் சிலைகள் திருடப்படவும் வாய்ப்புள்ளது. அதனால், காவலர்களை நியமித்து, சிதிலமடைந்த கதவுகளை மாற்ற இந்த சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (ஜூன் 6) விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: பிணையில் வெளிவந்தவர் மீண்டும் வழிப்பறியில் ஈடுபட்டதற்கு நீதிபதி கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.