ETV Bharat / state

ஒமைக்ரான் பரவல் : நீதிமன்றத்தில் நேரடி விசாரணை ரத்து! - உயர் நீதிமன்றத்தில் நேரடி விசாரணை ரத்து

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில், இன்று துவங்க இருந்த நேரடி விசாரணை தொடர்பான அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் நேரடி விசாரணை ரத்து
நீதிமன்றத்தில் நேரடி விசாரணை ரத்து
author img

By

Published : Jan 3, 2022, 8:05 AM IST

Updated : Jan 3, 2022, 8:52 AM IST

சென்னை: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 2020 மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக உயர் நீதிமன்றம் மூடப்பட்டு, அவசர வழக்குகளை மட்டும் நீதிபதிகள், தங்கள் வீடுகளிலிருந்து காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தினர்.

கலப்பு முறை விசாரணை

அதனை தொடர்ந்து, தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து வழக்குகளும் நேரடி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நீதிபதிகள், உயர் நீதிமன்றத்துக்கு வந்து வழக்குகளை விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக, வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி வாதிட விரும்பினால், அதற்கு அனுமதி வழங்கப்பட்டு, காணொலி காட்சி மூலமும், நேரடியாகவும் என கலப்பு விசாரணை முறை அமலிலிருந்து வந்தது.

S
S

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில், ஜனவரி 3 ஆம் தேதி முதல் வழக்குகள் நேரடியாக மட்டும் விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம், டிசம்பர் 27ஆம் தேதி அறிவித்திருந்தது.

நீதிமன்றத்தில் நேரடி விசாரணை ரத்து
நீதிமன்றத்தில் நேரடி விசாரணை ரத்து

காணொலி காட்சி விசாரணை

21 மாதங்களுக்குப் பின் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் நேரடி விசாரணை துவங்க இருந்த நிலையில், ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக, இன்று முதல் துவங்க இருந்த நேரடி விசாரணை தொடர்பான அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு, காணொலி காட்சி மூலம் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் நேரடி விசாரணை ரத்து
நீதிமன்றத்தில் நேரடி விசாரணை ரத்து

அந்த அறிவிப்பில், நேரடி மற்றும் கலப்பு விசாரணை முறையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்குகள் தாக்கல், உத்தரவு நகல் கோரிய விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் எனவும், தவிர்க்க முடியாத நிலையில் குறிப்பிட்ட கவுண்டர்கள் அல்லது பிரத்யேக பெட்டிகளில் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!

Last Updated : Jan 3, 2022, 8:52 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.