ETV Bharat / state

4 ஆண்டுகளுக்குப் பின் சென்னை - ஹாங்காங் நேரடி விமான சேவை தொடங்குகிறது!

Chennai to Hongkong direct flight: சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு நேரடி பயணிகள் விமான சேவை வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

direct-flight-from-chennai-to-hong-kong-started-after-4-years
சென்னை டூ ஹாங்காங் விமான சேவை தொடக்கம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 2:01 PM IST

சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங் வரை கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் நேரடி விமான சேவையை வழங்கி வந்தது. இந்நிலையில், அந்த விமான சேவைகள் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலகம் முழுவதும் கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

கரோனா தொற்று பாதிப்பு முடிந்து சகஜ நிலை திரும்பிய பின், சென்னையில் இருந்து பல நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டன. ஆனால், சென்னை டூ ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பின் வருகிற 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியில் இருந்து கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், மீண்டும் ஹாங்காங் - சென்னை இடையே நேரடி விமான சேவையைத் தொடங்குகிறது. இந்த விமான சேவை வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் நிறுத்தி வைக்கபட்ட சென்னை - ஹாங்காங் நேரடி விமான சேவை, 4 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தொழில் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், அதோடு சென்னையில் இருந்து ஜப்பான், தென் கொரியா, லண்டன் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு இந்த விமானம் இணைப்பு விமானமாகவும் இருக்கும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: இயக்குநர் மாரி செல்வராஜின் உதவி இயக்குநர் திடீர் மரணம்.. போலீசார் தீவிர விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.