ETV Bharat / state

12 ஆண்டுகளுக்குப் பின் சென்னை ஐஐடியில் நேரடிக் கலந்தாலோசனை - ஐஐடி மெட்ராஸ்

12 ஆண்டுகளுக்குப் பின் நேரடிக் கலந்தாலோசனை, தேர்வு எழுதுவோரும் அவர்களின் பெற்றோர்களும் சென்னை ஐஐடி நிறுவன வளாகத்தைப் பார்வையிட்டு, தற்போதைய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பி பதில்களைப் பெற வாய்ப்பு ஏற்ப்படுத்தியுள்ளது.

12 ஆண்டுகளுக்குப் பின் நடக்கவிருக்கும் சென்னை ஐஐடியின் நேரடிக் கலந்தாலோசனை

author img

By

Published : Jun 12, 2023, 2:13 PM IST

சென்னை: ஜேஇஇ 2023 தேர்வர்கள் சென்னை ஐஐடி வளாகத்தைப் பார்வையிட்டு ஒருநாள் சிறப்பு அனுபவங்களைப் பெறும் வகையில் செயல்விளக்க நாள் நிகழ்ச்சியும் மற்றும் சேரும் முன்னரே மாணவர்கள் நேரில் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என சென்னை ஐஐடி யின் புதிய ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆன்லைன் மூலம் வரும் ஜூன் 17, 18 தேதிகளிலும், நேரடியாக ஜூன் 24ந் தேதியில் இணைந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் visit.askiitm.com என்னும் இணைய முகவரியில் முன்பதிவு செய்தல் அவசியம் என தெரிவித்துள்ளது. மேலும் வரும் ஜூன் 16-ஆம் தேதி தான் முன்பதிவு செய்ய இறுதி நாள் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியால் செயல்விளக்க விரிவுரைகளைக் கேட்கவும், மாணவர் கிளப்புகளை சந்திக்கவும் தேர்வெழுதுவோருக்கு வாய்ப்புக் கிடைக்கும். இதனை முழுவதுமாக பயன்படுத்தி கொள்ளவும் என கூறியுள்ளது.

தேர்வு எழுதுவோரும் அவர்களின் பெற்றோர்களும் சென்னை ஐஐடி நிறுவன வளாகத்தைப் பார்வையிட்டு, தற்போதைய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பி பதில்களைப் பெறலாம். இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, கூறும்போது, “2000 ஆண்டு முதல் 2009 வரை ஆசிரிய உறுப்பினராக இருந்தபோது கலந்தாய்வு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளேன். அப்போதெல்லாம் ஜேஇஇ மாணவர்கள் சென்னை ஐஐடிக்கு வந்து ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறுவது வழக்கம். கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு அம்சங்கள், விளையாட்டு, உணவு போன்ற பல்வேறு அம்சங்கள் தொடர்பாக அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாங்கள் பதிலளித்து இருக்கிறோம்.

இதையும் படிங்க: Coimbatore: கேஸ் கசிவால் தீ விபத்து! வட மாநிலத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் படுகாயம்

இதனால், எங்களுடன் உரையாடுவதன் மூலம் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பதில்களைப் பெற்று திருப்தியடைவர். 2010-ல் ஆன்லைன் முறை தொடங்கப்பட்ட பின்னர் நேரடிக் கலந்தாலோசனை முறை நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த ஆண்டில், மாணவர்கள் வளாகத்திற்கு வந்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து அதன் பின்னர் ஆன்லைன் கலந்தாய்வில் தங்கள் விருப்பங்களை நிரப்பும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைத்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

AskIITM முன்முயற்சியாக, முன்னாள் மற்றும் தற்போதைய மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு இந்த செயல்விளக்க நாள் நடத்தப்படுகிறது. பாடநெறி, ஆசிரியர்கள், வளாகச் சூழல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக கேள்விகளை askiitm.com இணையதளத்தில் தேர்வர்கள் கேட்கலாம். முன்னாள் மாணவர்கள், தற்போதைய மாணவர்களைக் கொண்ட குழுவினர் அவற்றுக்கு பதிலளிப்பர்.

இந்நிலையில், ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதில்களையும் தேர்வர்கள் அவற்றில் காண முடியும் என்றும் ஐஐடி மெட்ராஸ் தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றில் ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட வீடியோ பதிவுகள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்து அதனின் இனையதளத்தையும் (http://instagram.com/askiitm/ & https://www.youtube.com/@askiitm) வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க:நாடாளுமன்ற தேர்தலில் விசிக யாருடன் கூட்டணி - திருமாவளவன் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.