சென்னை: அண்ணா பல்கலைக்கழக கல்வி மையம் வெளியிட்டுள்ள கால அட்டவணையில், "மார்ச் முதல் ஜுன் வரை உள்ள நடப்பு பருவத்திற்கான பி.இ, பி.டெக் படிப்பில் 4,6,8ஆம் பருவ மாணவர்களுக்கும், பி.ஆர்க் படிப்பில் 4,6,8,10ஆம் பருவத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 7ஆம் தேதி முதல் ஜூன் 11ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடைபெறும். ஜுன் 13ஆம் தேதி முதல் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும்.
இந்தப் பருவத்திற்கான தேர்வுகள் ஜுன் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும். வாரத்தில் 6 நாள்களும் மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படும்.
அடுத்த பருவத்திற்கு நேரடி வகுப்புகள் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கும். அதேபோல் எம்இ, எம்டெக், எம்ஆர்க் 4ஆம் பருவம் மாணவர்களுக்கும், எம்சிஏ 4,6ஆம் பருவம் மாணவர்களுக்கும், எம்பிஏ 4ஆம் பருவம் மாணவர்களுக்கும், எம்சிஏ 4,6,8,10ஆம் பருவம் மாணவர்களுக்கும், எம்பிஏ மாணவர்களுக்கு 4,6,8,10ஆம் பருவம் மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 4ஆம் தேதி வரை நடைபெறும்.
ஜூலை மாதம் ஆறாம் தேதி முதல் செய்முறை தேர்வுகள் தொடங்கி நடத்தப்படும். ஜூலை மாதம் 18ஆம் தேதி மாணவர்களுக்கான நடப்பு பருவத்திற்கான தேர்வுகள் நடைபெறும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் ஆர்மோனிய பெட்டி வாசித்து வாக்கு சேகரித்த வேட்பாளர்!