சென்னை: தமிழ்நாடு பாஜக மாநில செயலாளரும், தகவல் தொழிநுட்ப பிரிவு மாநில செயலாளருமாக இருந்த திலீப் கண்ணன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாஜகவில் இருந்து தொடர்ந்து மாநில நிர்வாகிகள் விலகுவது அதிகரித்து கொண்டே வருகிறது. பாஜகவில் இருந்து விலகி செல்பவர்கள் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இதனால் பாஜகவின் எதிர்காலம் என்ன ஆகப்போகிறது என அக்கட்சியினர் மத்தியில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.
நேற்றைய தினம் பாஜகவின் தகவல் தொழிநுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்தார். அதற்கு முன்பாக மதுரை டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்தார். அண்ணாமலையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி பாஜகவின் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகினார். பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து போராட்டம் மற்றும் திமுகவினர் மீதான குற்றச்சாட்டு போன்றவற்றில் அதிரடியை தொடங்கினார். ஆனால் கட்சிக்குள் ஆடியோ, வீடியோ விவகாரங்கள் பல குழப்பங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.
விலகிய அனைத்து நிர்வாகிகளும் பொதுவாக கூறக்கூடிய வார்த்தையாக வார் ரூம்(War room) இருக்கிறது. அப்படி என்ன தான் வார் ரூமில் செய்கிறார்கள் என்ற சந்தேகம் பாஜகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு எதிராக கருத்து கூறும் பாஜகவினரை கடுமையாக விமர்சனம் செய்வதற்காக வார் ரூமை பயன்படுத்துகின்றனர் என நடிகை காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியிருந்தார். அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் ஏற்கனவே இருந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை ஓரம்கட்டும் வேலைகளில் ஈடுபடுவதால் அக்கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் வெளியேறுவதற்கு காரணம் என வெளியேறியவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
பாஜகவில் இருந்து விலகியது குறித்து விளக்கம் அளித்துள்ள திலீப் கண்ணன், "கனத்த இதயத்துடன் எழுதுகிறேன். இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ?. தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்? இறைவனுக்கே வெளிச்சம். ஒருத்தருக்கு கூட மீடியா வெளிச்சம் வந்திட கூடாதுனு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர் மட்டும் பேட்டி கொடுத்து, இன்று வரை சீன் போட்டுட்டு இருக்கார்.
தன்னை சுத்தமானவர் நேர்மையானவர்னு சொல்கிற நபர் ஏன் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி கும்பலை கட்சியில் வைத்துள்ளார்?. தன்னைவிட டெல்லி அளவில் பெரிய செல்வாக்கு உள்ள தமிழக பாஜக முகமாக இருந்தார் கே.டி.ராகவன். அவர் மீது இதுவரை எந்த பெண்ணும் புகார் அளிக்கவில்லை. அவரை முதலில் காலி செய்தார். மாநில பொதுச்செயலாளர் மொத்தம் நான்கு பொதுசெயலாளர்கள் அவர்களில் மூவருக்கு பெரிய பொறுப்பு கொடுத்துவிட்டு, தன்னைவிட அறிவாளியான பேராசிரியர் சீனிவாசனுக்கு மட்டும் பெரிய பொறுப்பாளர் கொடுக்கவில்லை.
அடுத்து பொன்.பாலகணபதி மாநில பொதுச்செயலாளர் இருந்தார். அவருக்கு சின்ன பிரச்சினை இருந்தது. அக்கா சசிகலா புஷ்பா நான் மீடியாவில் அவர் மீது தவறு இல்லை என்று பேட்டி கொடுக்கிறேன் என்ற போது அந்தக்காவை தடுத்து பொன்.பாலகனபதியை அசிங்கப்படுத்தினார். அடுத்து நைனார் அண்ணன் அவரை இவர்கள் இதுவரை ஒரு மனிதனாக கூட மதித்தது இல்லை. மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளை தனது அறையில் உள்ளே வைத்துக்கொண்டு அவதூறாக போலீஸ் தோரணையில் ஏளானமாக பேசுவது.
இவர் வந்து தான் எல்லாம் கிழிச்ச மாதிரி எல்லாம் கம்பு சுத்துறானுங்க இவர் இடத்தில் ஒரு பொம்மை வந்திருந்தாலும் பாஜக தொண்டன் தூக்கி கொண்டாடிருப்பான். பாஜக தொண்டனை கைது செய்துவிட்டார்கள்னு செய்தி அனுப்பினால் அவன் ஏன் இப்படி பதிவு போட்டான்னு திருப்பி கேள்வி கேட்கிறது, அவனுக்கு எந்த சட்ட உதவியும் செய்கிறது இல்ல. சட்ட உதவி செய்கிறவனை ஏன் செய்கிறனேனு மிரட்டல் விடுறது.
-
கனத்த இதயத்துடன் பாஜவில் இருந்து வெளியேறுகிறேன்..
— Dilip Kannan (@DilipKannan) March 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
🙏🙏🙏 pic.twitter.com/MJg1gNG2IA
">கனத்த இதயத்துடன் பாஜவில் இருந்து வெளியேறுகிறேன்..
— Dilip Kannan (@DilipKannan) March 6, 2023
🙏🙏🙏 pic.twitter.com/MJg1gNG2IAகனத்த இதயத்துடன் பாஜவில் இருந்து வெளியேறுகிறேன்..
— Dilip Kannan (@DilipKannan) March 6, 2023
🙏🙏🙏 pic.twitter.com/MJg1gNG2IA
இந்த சங்கிகளுக்கு ஒரு பழக்கம் இருக்கு எவனையாது தூத்தனும்ணா மொத்தமா தூத்துறது, அவன் என்ன பண்ணிட்டு வந்திருக்கான் அவன் உழைப்பு என்ன?. இப்பேர்பட்டவன் எப்படி திடீர்னு பேசுறான், இவனே இப்படி பேசுறான்ன, இவன் என்ன செய்தார்கள்? என்று ரெண்டு பக்கமும் யோசிக்க மாட்டானுங்க. பாஜக தலைவராக முருகன் இருக்கும் போது மாற்று கட்சியில் இருந்து மிக முக்கிய தலைவர்களை எல்லாம் கொண்டு வந்து கட்சியில் இணைத்தார்.
அண்ணாமலை வந்து அப்படி யாரையாவது கட்சியில் இணைத்த நிகழ்வு உண்டா?. சொந்த கட்சியில் இத்தனை வருடம் உழைத்தவனை வேவு பாப்பது, ஊர் உலகமே கேவலமாக பேசும் ரொட்டியை கூடவே வச்சு சுற்றுவதுதான் இந்த புனிதரின் வேலை போல. நான் சொன்னது உண்மையா பொய்யா என்பது கட்சியின் உள்ளே இருக்கும் 90% நிர்வாகிகளுக்கு தெரியும். வெளியில் உள்ள சோசியல் மீடியா நண்பகளுக்கு அவர் புனிதராக தான் தெரிவார். இன்னும் இந்த வார் ரூம் கோஸ்டிகள் என்னைப்போல எத்தனை பேரை வெளியே அனுப்ப போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்.
இந்த சங்கிகளுக்கு ஒன்னு சொல்லிக்க விரும்புகிறேன். எப்படியும் என்ன திட்டுவிங்க, அதுக்கு முன்னாடி ஒரு தீவிர வெறிபிடிச்ச சங்கியே இப்படி போறானே இவனுங்க எந்தளவுக்கு கேவலமா இருக்கானுங்கனு கொஞ்சமாது யோசிச்சி பாருங்க. இதுவரை இந்த கட்சிக்கு என்னால் முடிந்த அளவிற்க்கு 100% உழைத்திருக்கேன். என்னை எப்படியும் திட்டி தீர்பீர்கள், அதற்கு முன்னால் ஒரு சித்தாந்தவாதியே இப்படி போறானே தவறு எங்கே நடக்குதுனு ஒரு முறை யோசிச்சிட்டு திட்டுங்க. இத்தனை காலம் என்னோடு பயனித்த பாஜக ஆதரவாளர்கள், பாஜக நண்பர்கள், பாஜக அனுதாபிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்.. அண்ணாமலை பகிரங்க சவால்..