சென்னை வியாசர்பாடி பகுதியில் மாநகராட்சி சார்பில் சமூக கலைப்பணி திட்டத்தின் கீழ் கரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் துண்டு பிரசுரங்கள், கை எழுத்து இயக்கம், கானா பாடல்கள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவைகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்து கொண்டு பார்வையிட்டார்.
பின்பு செய்தியாளரிடம் பேசிய அவர், "களப்பணிகள் எந்த அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதற்கு வட சென்னை பகுதி உதாரணம். இராயபுரம், தண்டையார் பேட்டை மண்டலங்களில் தொற்றுகள் குறைந்துவிட்டன. தொடர்ந்து 3-4 மாத காலத்திற்கு இந்த களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ரஜினி இ-பாஸ் வாங்கினாரா? என்பது குறித்து ஆய்வு என ஆணையர் பேட்டி ரஜினி இ-பாஸ் வாங்கினாரா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஒன்றை லட்சம் இ-பாஸ்களை ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. ரஜினி அவர் பெயரிலோ அல்லது அவரது ஓட்டுநர் பெயரிலோ இ-பாஸ் வாங்கி இருக்கலாம்.
நிலவரம் என்ன? என்பதை ஆய்வு செய்து விரைவில் தெரிவிக்கப்படும். இ-பாஸ் எடுக்காமல் அவர் பயணம் செய்திருந்தால் காவல் துறையினர் நடவடிக்கைகள் எடுப்பார்கள். மாதரவரம் பழச்சந்தையில் மொத்த விலை வியாபாரம் மட்டுமே செய்ய வேண்டும்.
சென்னை மாநகராட்சியுடன் 92 தொண்டு நிறுவனங்கள் இணைந்து சுமார் 4 ஆயிரத்து 523 தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா? என்று விசாரித்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்வார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மருத்துவ எமர்ஜென்ஸி: இ-பாஸ் பெற்ற ரஜினிகாந்த்!