ETV Bharat / state

வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்' விருது! - Kalaignar Kalaithurai Vithagar Award

கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு வழங்கப்பட உள்ளது.

வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது!

author img

By

Published : Jun 2, 2022, 9:21 PM IST

சென்னை: தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3 அன்று வழங்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறையின் மானியக் கோரிக்கைகளின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான நாளை (3.6.2022) ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதும், பரிசுத் தொகை ரூபாய் பத்து லட்சமும், வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் அடிப்படையில், விருதாளரை தேர்ந்தெடுக்க திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

2022-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதிற்காக பலநூறு திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதிப் புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ் (வயது 90) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடிகருக்கென்று தனிபாணி கொள்ளாமல், தன்னை முன்னிறுத்தாமல், கதாபாத்திரம் அறிந்து உணர்ந்து, வசனம் எழுதி, தான் பங்காற்றிய படங்களுக்கு செழுமை சேர்த்தவர்.

திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ், முன்னணி நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் நடித்த 1,000 திரைப்படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர். தனது ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயரில் உள்ள ஏசுதாஸில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக் கொண்டார். இவர் 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் தொடர்ந்து பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "பொம்மை" ட்ரெய்லரை உலகம் முழுவதும் 600 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.