சென்னை: வேட்பாளர்களின் தேர்தல் அலுவலங்களுக்கு தினமும் காவலர்கள் ரோந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டு அனைத்து காவல் ஆணையர், மாவட்டக் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் "சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்களில் பட்டா புத்தகம் வழங்க வேண்டும். தினமும் காவல் துறையினர் அங்கு ரோந்து சென்று, பட்டா புத்தகத்தில் கையெழுத்திட வேண்டும். இதனை ரோந்து காவலர்களுக்கு அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "தேர்தல் அலுவலகங்களில் இரவு பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வகையில், அந்தந்த வேட்பாளர்கள், ஐந்து பேர் கொண்ட குழுவினரை நியமித்து சுழற்சி முறையில் பணியாற்ற வற்புறுத்த வேண்டும்" எனவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.