ETV Bharat / state

‘காவல் துறையினர் பொதுமக்களிடம் தகாத வார்த்தைகளால் பேசக்கூடாது’ - சிறப்பு டிஜிபி உத்தரவு!

author img

By

Published : Feb 2, 2021, 12:47 PM IST

சென்னை: தூத்துக்குடியில் உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, காவல் துறையினர் பொதுமக்களிடம் தகாத வார்த்தைகளால் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என சிறப்பு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிறப்பு டிஜிபி உத்தரவு
சிறப்பு டிஜிபி உத்தரவு

தூத்துக்குடி அருகே தனியார் ஓட்டலில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட முருகவேல் என்பவரைக் கண்டித்த உதவி ஆய்வாளர் பாலுவை முருகவேல் சரக்கு வேனால் மோதி கொலைசெய்த சம்பவம் காவல் துறையினரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், காவல் துறையினருக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “தூத்துக்குடியில் உதவி ஆய்வாளர் பாலு தகாத வார்த்தையால் முருகவேலைத் திட்டியதால் ஆத்திரமடைந்து கொலைசெய்ததாகத் தெரியவந்தது. இதையடுத்து, பொதுமக்களிடம் காவலர்கள் தகாத வார்த்தையால் பேசுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

மாவட்டத்தில் குற்றவாளிகளைப் பிடிப்பதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைப் பிடித்தவுடன் உடனடியாகத் தனிப்படையைக் கலைக்க வேண்டும். ஏனெனில் திருப்பூரில் குற்றப்பிரிவு தனிப்படை காவல் துறையினர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்றுமுதல் நடைபெறவுள்ளதால் குடிபோதையிலுள்ள நபர்களைக் காவல் துறையினர் கவனமுடன் கையாள வேண்டும். குடிபோதையிலுள்ள சந்தேக நபர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரிக்க கூடாது, சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்ய வேண்டும்.

சிறப்பு டிஜிபி வெளியிட்ட சுற்றறிக்கை
சிறப்பு டிஜிபி வெளியிட்ட சுற்றறிக்கை

நெடுஞ்சாலையில் ரோந்து வாகனங்களை நிறுத்துவதை காவல் துறையினர் தவிர்க்க வேண்டும். இதனால், அதிகப்படியான விபத்துகள் நடைபெறுகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உதவி ஆய்வாளரை வாகனம் ஏற்றிக்கொன்றவர் நீதிமன்றத்தில் சரண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.