ETV Bharat / state

குழந்தைகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் - மாநகராட்சி ஆணையர் வழங்கினார்! - சென்னை மாநகராட்சி

சென்னை: மாநகர பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு குடல்புழு நிக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

deworming-tablets-for-children-corporation-commissioner

author img

By

Published : Sep 11, 2020, 7:26 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார மையங்களிலும், அங்கன்வாடி மையங்களிலும் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் முதல் சுற்று செப்.14 முதல் செப்.19 வரையிலும் மற்றும் இரண்டாவது சுற்று செப்.21 முதல் செப். 26 வரையிலும் வழங்கப்படவுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கின்படி இந்தியாவில் 1 முதல் 19 வயதுடைய 24.1 கோடி குழந்தைகள் குடல் தொற்று ஏற்படக் கூடிய அபாய நிலையில் உள்ளனர். இது சராசரியாக 1 முதல் 14 வயதுடைய குழந்தைகளிடன் 68 விழுக்காடாக உள்ளது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சென்னை ஆரம்ப சுகாதார மையங்களிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டடத்தின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களிலும் குடற்புழு நீக்க (அஸ்பெண்டாசோல்) மாத்திரைகள் வழங்கப்படவுளது.

குடற்புழு நீக்க நாட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அங்கன்வாடி பணியாளர்களுக்கு குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள், குடற்புழு நீக்கம் நாட்கள் அதன் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் பெருநகர சென்னை மாநகராட்சியில் 16 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகள் பயனடைவார்கள்.

எனவே அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரையை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்களில் பெற்று பயன் பெறவும். வளமான இளைய சமுதாயத்தை உருவாக்கவும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சிவகளை, ஆதிச்சநல்லூர் அகழாய்வு களங்களில் தொல்லியல் துறை இயக்குநர் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.