சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படியும், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் அனைத்து வகைப் பள்ளிகளும், பள்ளிக் கல்வித் துறையின் தடையின்மை சான்று, அங்கீகாரம் பெற்றே செயல்பட வேண்டும். தடையின்மை சான்று, அங்கீகாரம் பெறாமல் எந்த ஒரு பள்ளியும் செயல்படக்கூடாது என ஏற்கனவே பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளை ஆய்வு செய்து தடையின்மைச் சான்று, அங்கீகாரமின்றி செயல்பட்டு வந்த பள்ளிகளுக்கு காரணம் கேட்டு நோட்டிஸ் அனுப்பினர்.
தடையின்மைச் சான்று, அங்கீகாரமின்றி செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாததுடன், அந்தப் பள்ளியால் வழங்கப்படும் கல்வி சான்றிதழ்களும் தகுதியற்றதாக இருக்கிறது. மேலும் அரசால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளை எழுத இயலாத நிலையும் ஏற்படுகிறது.
எனவே தடையின்மைச் சான்று, அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை பெற்றோர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் தடையின்மை சான்று, அங்கீகாரம் பெறாமல் தொடர்ந்து செயல்படும் பள்ளிகள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிகளுக்கு எச்சரிக்கப்படுகிறது.
தடையின்மைச் சான்று, அங்கீகாரம் இன்றி செயவ்படும் பள்ளிகளின் பட்டியல்
1.கே.பி.ஐ.எல்.எம். நர்சரி பிரைமரி பள்ளி - திருவல்லிக்கேணி
2.சுபேதா நர்சரி பிரைமரிப் பள்ளி - பழைய வண்ணாரப்பேட்டை
3.ஜிகே நர்சரி பிரைமரிப் பள்ளி - பழைய வண்ணாரப்பேட்டை
4.குரு நர்சரி பிரைமரிப் பள்ளி - புதிய வண்ணாரப்பேட்டை
5.நேதாஜி சுகாஸ் சந்திரபோஸ் நர்சரி பள்ளி - கொருக்குப்பேட்டை
6.மீனாட்சி வித்யாஸ்ரமம் நர்சரி பிரைமரிப் பள்ளி - ராயபுரம்
7.ஆதித்தயா வித்யாலயா நர்சரி பிரைமரிப் பள்ளி - பழைய வண்ணாரப்பேட்டை
8.அன்பு இன்பு மாலிக் நர்சரி பிரைமரிப் பள்ளி - ராயபுரம்.
9.பி.எஸ்.நர்சரி பிரைமரிப் பள்ளி - ராஜாஜி சாலை, பாரிமுனை
10. அல் பைதா நர்சரி பிரைமரிப் பள்ளி - மண்ணடி
11.செயின்ட் ஜோசப் நர்சரி பிரைமரிப் பள்ளி - வேளச்சேரி
12.கிட்ஸ் பிராதிஷ் நர்சரி பிரைமரிப் பள்ளி - வடபழனி
13. ஆச்சார்யா பாலா சிக் ஷா மந்திர் நர்சரி பிரைமரிப் பள்ளி - சாலிகிராமம், கே.கே.நகர்
14.பால மந்திர் நர்சரி மற்றும் பிரைமரிப் பள்ளி - தி.நகர்.
15.டாக்டர் கே.என்.கேசரி நர்சரி மற்றும் பிரைமரிப் பள்ளி - எம்ஜிஆர் நகர், உட்பட 331 பள்ளிகளின் பட்டியலையும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.