இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தமிழ்நாட்டுப் பிரிவுக்கு துணை இயக்குநராக பிரப்தீப் கவுர் பதவி வகித்து வருகிறார். இவர், தமிழ்நாடு அரசுக்கு கரோனா தொற்று தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைக் குழுவிற்கு, அவ்வப்போது தனது கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
மேலும், அவரது ட்விட்டர் பக்கத்தில் கரோனா விழிப்புணர்வு தொடர்பான செய்திகளைப் பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில், பிரப்தீப் கவுர், தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரப்தீப் கவுர் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக இருப்பதால், நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாம் அனைவரும் சமூகத்தை காப்பதற்காக 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,174 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி!