ETV Bharat / state

'ஈ, கொசுவுக்கு எல்லாம் நாங்கள் அச்சப்படுவதில்லை' - அமைச்சர் ஜெயக்குமார் - sasikala released

சசிகலா வருகையால் அவர் சேர்த்து வைத்த சொத்துகளை கொள்ளை அடித்த டிடிவி தினகரன் தான் பதற்றத்தில் உள்ளார். ஈ, கொசுவுக்கு எல்லாம் நாங்கள் அச்சப்படுவதில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

deputy-chief-minister-will-be-with-us-till-the-end-minister-jayakumar

author img

By

Published : Feb 7, 2021, 1:30 PM IST

சென்னை ராயப்பேட்டையில் முதலமைச்சரின் மினி கிளினிக் திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கிவைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் ஜெயக்குமார், பொதுமக்களின் நலனுக்காக அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை என பாராமலும் நாங்கள் தொடர்ந்து பணி செய்து வருகிறோம்.

சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களை அதிமுகவில் மீண்டும் இணைத்துக்கொள்ள வாய்ப்பே இல்லை. முதலமைச்சரின் நிலைப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து நீடிக்கிறோம். சசிகலா கட்சிக்கு தேவையில்லை என்ற நிலைபாட்டில் நேற்றும் இன்றும் நாளையும் எந்த மாற்றமும் இல்லை.

சசிகலா வருகையால் அவர் சேர்த்து வைத்த சொத்துகளை கொள்ளை அடித்த டிடிவி தினகரன்தான் பதற்றத்தில் உள்ளார். ஈ, கொசுவுக்கு எல்லாம் நாங்கள் அச்சப்படுவதில்லை. சசிகலா அதிமுக அலுவலகத்தில் நுழைந்தால் நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

deputy-chief-minister-will-be-with-us-till-the-end-minister-jayakumar
மினி கிளினிக்கை தொடங்கிவைத்த அமைச்சர்

டிஜிபி அலுவலகத்திற்கு அதிமுகவின் தொண்டன் என்ற அடிப்படையில் கட்சியை காப்பாற்றும் கடமை உடனே புகார் அளிக்க சென்றேன். அங்கு பேட்டி கொடுக்கும் பொழுது சட்ட அமைச்சர் உள்ளிட்ட மூத்தவர்கள் இருந்ததால் அவர்கள் பேசினார்கள்.

டிடிவி தினகரன் கடந்த தேர்தலில் திமுக வின் 'பி' டீமாக செயல்பட்டார். சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் திமுகவின் பி டீமாக செயல்பட்டு ஆட்சியும் கட்சியும் கலைக்கப் பார்த்தனர். ஆனால் அது நடைபெறாமல் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக ஆட்சி நடைபெற்று வருகிறது .

மினி கிளினிக்கை தொடங்கிவைத்த அமைச்சர்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடைசிவரை தங்களுடனேயே இருப்பார். அவரின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை” என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.