தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் தேதிக்காக அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஐஏஎஸ் கேடர் விதிமுறைகள் 1954 பிரிவு 4(2)இன்படி, இணை தலைமைத் தேர்தல் அலுவலர், இணை தலைமைத் தேர்தல் அலுவலர் (ஐடி) பொதுப்பிரிவு (தேர்தல்) என இரண்டு தற்காலிகப் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
வேளாண் துறை இணைச் செயலாளராக இருந்த டி. ஆனந்த் ஐஏஎஸ், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளராக இருந்த அஜய் யாதவ் ஐஏஎஸ் ஆகியோர் இணை தலைமைத் தேர்தல் அலுவலர்களாக நியமனம்செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழில் பதவி ஏற்ற முதல் தமிழச்சி: தமிழிசை 'கை'யில் புதுச்சேரி!