ETV Bharat / state

கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்க கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை தனியார் பள்ளிகள் உறுதியளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு department-of-school-education-has-ordered-private-schools-to-ensure-that-no-action-is-taken-against-students-who-do-not-pay-tuition-fee

author img

By

Published : Mar 24, 2022, 11:54 AM IST

சென்னை: கரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை, முறையே 40, 35 சதவீதம் என இரு தவணைகளாக வசூலித்துக் கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு (ஜூலை.29) விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நடப்பு கல்வியாண்டில் 85 சதவீதம் கட்டணம் வசூலித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் (ஜூலை30) தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிருஷ்ணகுமார், நடப்பு கல்வியாண்டில் வருவாய் இழப்பு இல்லாத அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பெற்றோர்களிடம் 85 சதவீத கட்டணத்தை ஆறு தவணைகளாக வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

பெற்றோர் கோரிக்கை : கரோனா வைரஸ் தொற்றால் தமிழ்நாட்டில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் உயர் நீதிமன்ற உத்தரவின்படி நடப்பாண்டில் 85 சதவீதம் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். அந்த கட்டணமும் தவணைகளாக செலுத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினால் தங்களின் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தைக் குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்த முடியாமல் இருப்பதால் கால அவகாசம் வழங்க பெற்றோர்கள் கேட்டு வருகின்றனர்.

மாணவர்களிடம் பாரபட்சம்: ஆனால், சில பள்ளிகள் கட்டணம் செலுத்தாத மாணவர்களிடம் பாரபட்சம் காண்பிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதுபோன்ற தவறுகள் பள்ளிகளில் நடைபெறவில்லை என சான்றிதழ் அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்கக்கூடாது.

கல்விக் கட்டணம்
கல்விக் கட்டணம்

தரக்குறைவாக பேசக்கூடாது: மேலும், பெற்றோர்களை தரக்குறைவாகப் பேசக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. உத்தரவைப் பள்ளிகள் முறையாக பின்பற்றுகிறதா? என்பது குறித்து உறுதிமொழி சான்று தர அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கடும் நடவடிக்கை: கட்டணம் செலுத்தாத யாரையும் வெளியில் நிற்கவைக்கவில்லை, அவர்களின் பெற்றோர்களை தரக்குறைவாக பேசவில்லை என்று சான்றிதழ் தரவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சான்றிதழ் தந்தும் அந்த பள்ளிகள் மீது ஏதும் புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று துபாய் பயணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.