சென்னை: புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் அதேபோல அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 1 முதல் 12 வகுப்பு வரை கட்டாயம் இந்தாண்டு இறுதி தேர்வு உண்டு என பள்ளிக்கல்வித்துறை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வு பள்ளி அளவில் நடைபெறும் எனவும், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கேள்விகள் இடம் பெறும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு திட்டமிட்டபடி வரும் 5 ஆம் தேதி தொடங்குகிறது.
மே 5முதல் 13 ஆம் தேதிக்குள்ளாக ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என்ற கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரையில் நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.