ETV Bharat / state

அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

கரோனா விடுமுறை நாள்களை ஈடு செய்ய இனிவரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
author img

By

Published : Nov 14, 2021, 3:47 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நீண்ட நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. நவம்பர் 1 முதல் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

பின்னர் தீபாவளி, தொடர் கனமழையால் கடந்த ஒரு வார காலமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மழை நின்ற பகுதிகளில் நாளை (நவ.15) முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட விடுமுறை நாள்களை ஈடு செய்யும் வகையில் இனி வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் திறக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.