இதுதொடர்பாக பொதுச் சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளதாவது, "ஒன்றிய அரசு 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குப் போடுவதற்காக 73 லட்சத்து 63 ஆயிரத்து 550 கோவிஷீல்டு தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது. அவற்றில் தற்போது 4 ஆயிரத்து 310 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அதேபோல் 14 லட்சத்து 90 ஆயிரத்து 540 கோவாக்சின் தடுப்பூசிகளில் தற்பொழுது 6 ஆயிரத்து 620 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. ஒன்றிய அரசிடம் இருந்து 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குப் பெறப்பட்ட 88 லட்சத்து 53 ஆயிரத்து 690 தடுப்பூசிகளில், 10 ஆயிரத்து 930 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
அதேபோல் தமிழ்நாடு அரசின் சார்பில் 18 முதல் 44 வரை வயது உள்ளவர்களுக்கு போடுவதற்காக பெறப்பட்ட 11 லட்சத்து 18 ஆயிரத்து 530 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 740 கோவாக்சின் தடுப்பூசிகள் என 13 லட்சத்து 10 ஆயிரத்து 270 தடுப்பூசியில் தற்போது கையிருப்பில் 1,590 தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன.
தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி 12 ஆயிரத்து 520 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மேலும் ஒன்றிய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் பெறப்பட்ட உடன் உடனடியாக மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பப்படும் " என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 44 கோடி கரோனா தடுப்பூசிகள் வாங்க ஆர்டர்: ஒன்றிய அரசு உத்தரவு