ETV Bharat / state

மிக்ஜாம் புயல் பாதிப்பால் சான்றிதழை இழந்தவர்கள் கவனத்திற்கு.. உயர்கல்வித்துறை அளித்த அப்டேட்!

Michaung Cyclone Impact: மிக்ஜாம் புயல் பாதிப்பால் சான்றிதழை இழந்தவர்கள், அதன் நகலை கட்டணமின்று வாங்கும் வகையில் உயர் கல்வித்துறை சார்பில் இணையதளம் உருவாக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Michaung Cyclone Impact
மிக்ஜாம் புயல் பாதிப்பு சான்றிதழ் பெற இணையதளத்தை உருவாக்கிய உயர் கல்வித்துறை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 7:03 AM IST

Updated : Dec 12, 2023, 7:11 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசால் பல்வேறு மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதில் ஒரு பகுதியாக மிக்ஜாம் புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி, அதன் வாயிலாக பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு கட்டணமின்றி சான்றிதழ்களை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 09ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களைப் பெற, உயர் கல்வித்துறை இணையதளத்தை உருவாக்கி உள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திக் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் கனமழை பெய்து கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க, மழை வெள்ள பாதிப்பினால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு, தங்கள் சான்றிதழ்களின் நகல்களை கட்டணமின்றி பெறுவதற்கு ஏதுவாக www.mycertificates.in என்ற இணையதளம் உயர்கல்வி துறையால் உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தாங்கள் இழந்த சான்றிதழ் பற்றிய விவரங்களை மேற்கண்ட இணையதளம் மூலமாக டிச.11 முதல் பதிவு செய்யலாம். மாணவர்கள் இணையதளம் மூலமாக சான்றிதழ்களின் விவரங்களைப் பதிவு செய்தபின், அவர்களது மின்னஞ்சலுக்கு ஒப்புகை (Acknowledgement) அனுப்பப்படும்.

அவ்வாறு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்டு, மாணவர்களுக்கு சென்னையில் வழங்கப்படும். மேலும், இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுபெற, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800–425–0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "16ஆம் தேதி முதல் வெள்ள நிவாரண டோக்கன்" - தங்கம் தென்னரசு தகவல்

Last Updated : Dec 12, 2023, 7:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.