இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து வரும் இரண்டு மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பெறுகின்றனர். தாராபுரம் மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார்.
நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் கபீர் கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் இணை இயக்குநர் அமுதவல்லி பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இணை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குநர் செல்வராஜ், கள்ளர் நலத்துறை இணை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரியர் மாணவர்களுக்கு 21ஆம் தேதி முதல் தேர்வு - சென்னை பல்கலை., அறிவிப்பு!