ETV Bharat / state

சீமான் மீது அவதூறு வழக்கு - நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு - சீமான் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

seeman
seeman
author img

By

Published : Jan 10, 2020, 6:00 PM IST

2019ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் கடுமையாக விமர்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நகர குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன், 'வேண்டுமென்றே அரசுக்குக் களங்கம் கற்பிக்கும் நோக்கில் அவதூறாகப் பேசிய சீமானை, அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும்' எனக்கோரி, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

குஜராத்தில் எளிய முறையில் திருமணம் முடிக்க இருக்கும் சி.ஆர்.பி.எஃப். காதல் ஜோடி!

இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து விசாரித்த நீதிபதி, வருகின்ற 21ஆம் தேதி சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Intro:Body:அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 14ம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேசியதாகவும்,
வேண்டுமென்றே களங்கம் கற்பிக்கும் நோக்கில் அவதூறாக பேசிய சீமானை, அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் நகர குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன்
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில்,சீமான் வரும் 21 ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.