ETV Bharat / state

மதன் ரவிச்சந்திரன் மீது உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கு!

author img

By

Published : Jul 29, 2020, 1:05 PM IST

Updated : Jul 29, 2020, 2:06 PM IST

சென்னை: சேனல் விஷன் என்ற யூ-டியூப் சேனலில் மதன் ரவிச்சந்திரன் என்பவர் தனக்கும், தனது குடும்பத்தாரின் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

உதய நிதி ஸ்டாலின்  மதன் ரவிச்சந்திரன்  உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கு  udahyanidhi stalin  madan ravichandran
மதன் ரவிச்சந்திரன் மீது உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கு

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில், "மதன் ரவிச்சந்திரன் என்பவர் தனது சேனல் விஷன் எனும் யூ-டியூப் சேனலில், மான்கறி vs உதயநிதி ஸ்டாலின்/ திருப்போரூர் துப்பாக்கிச் சூடு என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ, தனக்கும், தனது குடும்பத்தாரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது. என்னைப் பற்றி உண்மைக்குப் புறம்பாக தகவலை மக்கள் மத்தியில் அவதூறு செய்தி பரப்பும் மதன் ரவிச்சந்திரன் மீது இந்திய தண்டனை சட்டம், அவதூறு சட்டப் பிரிவின் கீழ் விசாரித்து, தண்டனை வழங்க வேண்டும்" இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "பொதுத்துறை பங்குகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும்" - இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம்

Last Updated : Jul 29, 2020, 2:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.