ETV Bharat / state

ஆளுநரை விமர்சித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு - இந்திய தண்டனை சட்டம் 124

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை அவதூறாக விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆளுநருக்கு எதிரான தரக்குறைவு பேச்சு: சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு தாக்கல்

author img

By

Published : Jan 19, 2023, 1:07 PM IST

Updated : Jan 19, 2023, 3:45 PM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் தமிழகம் குறித்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி அவதூறாகவும், கொச்சையாகவும் பேசினார்.

இதுகுறித்த வீடியோ வைரலாகி மீண்டும்மொரு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கொச்சையாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாகவும், ஆளுநரை கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் தரக்குறைவாக பேசியதாகவும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது இந்திய தண்டனை சட்டம் 124 (ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் மளிகையின் துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையவழியிலும், தபால் மூலமாகவும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநரின் செயலாளர், திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கிருஷ்ணமூர்த்தியை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பெற்றோர் சண்டையால் மகன் எடுத்த விபரீத முடிவு

Last Updated : Jan 19, 2023, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.