ETV Bharat / state

சென்னையில் அதிகரிக்கும் கரோனா - குறையும் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை!

author img

By

Published : Oct 3, 2020, 6:59 PM IST

சென்னை : கரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால் சென்னைக்கு வரும் உள்நாட்டு விமான பயணிகள், விமானங்களின் எண்ணிக்கைகள் இன்று (அக்.3) வெகுவாக குறைந்துந்துள்ளது.

Decreasing number of domestic air passengers

சென்னையில் கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த கரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மீண்டும் பெருமளவு அதிகரித்து வருகிறது.

சென்னையில் கரோனா தாக்கம் குறைந்ததையடுத்து வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்களில் வருகை பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் சென்னையில் கரோனா தாக்கம் பெருமளவு அதிகரித்து வருவதால் சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டன.

சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்களில் நாள்ளொன்றுக்கு வருகை பயணிகள் எண்ணிக்கை சுமாா் ஏழு ஆயிரத்து 500 க்கும் அதிகமாக இருந்தது. அதேபோல் சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 66 ஆக இருந்தது. ஆனால் இன்று(அக்.03) ஒரே நாளில் அது வெகுவாக குறைந்து, 57 உள்நாட்டு விமானங்கள் மட்டுமே சென்னையில் வந்து தரையிறங்குகின்றன. அதில் சுமாா் 5 ஆயிரத்து 200 போ் மட்டுமே சென்னைக்கு வருகின்றனா்.

குறையும் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை

ஒரே நாளில் ஒன்பது விமானங்கள் குறைந்து 2 ஆயிரம் பயணிகளும் குறைந்துவிட்டனா். சேலம் 12, கடப்பா 16, கோழிக்கோடு 16, மங்களூரு 18, தூத்துக்குடி 22, கோவை 23, திருச்சி 24, மதுரை 27, ஜெய்ப்பூா் 31 என்று மிகவும் குறைந்த அளவு பயணிகளே பயணிக்கின்றனர்.

சென்னையில் கரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால், பயணிகள் சென்னைக்கு வர தயங்குகின்றனா் என்று கூறப்படுகிறது. பயணிகள் வருகை குறைந்ததால் விமானங்களை இயக்க விமான நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.

இதையும் படிங்க: விஜய் சேதுபதியை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள் - போஸ்டரால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.