ETV Bharat / state

கடன் பிரச்னையால் விபரீதம் - மனைவி, மகன்களை கொன்றுவிட்டு, தந்தை தற்கொலை - சென்னையில் தனியார் வங்கி ஊழியர் தற்கொலை

கடன் பிரச்னையால் மனைவி மற்றும் இரண்டு மகன்களை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடன் பிரச்சினையால் விபரீதம்
கடன் பிரச்சினையால் விபரீதம்
author img

By

Published : Jan 2, 2022, 6:40 PM IST

சென்னை: சென்னையை அடுத்த பெருங்குடி பெரியார் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர், மணிகண்டன்(36).

இவருக்கு தாரா (35) என்ற மனைவியும், தரண் (10), தஹான்(1) என இரண்டு மகன்களும் இருந்தனர்.

மணிகண்டனின் சொந்த ஊர் கோயம்புத்தூர். சென்னை போரூரில் உள்ள தனியார் வங்கியில் மணிகண்டன் பணிபுரிந்து கொண்டு, கடந்த ஒரு ஆண்டாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி, மகன்களுடன் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இரண்டு மாதங்களாக மணிகண்டன் வேலைக்குச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு அதிக கடன் பிரச்னை இருந்து உள்ளது.

இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் டிசம்பர் 31ஆம் தேதி இரவு இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த மணிகண்டன் மனைவி, இரண்டு மகன்களை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மணிகண்டன் குடும்பம்
மணிகண்டன் குடும்பம்

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற துரைப்பாக்கம் காவல் துறையினர் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தற்கொலை எண்ணத்தைக் கைவிடுங்கள்
தற்கொலை எண்ணத்தைக் கைவிடுங்கள்

அப்போது, மணிகண்டன் கடன் தொல்லையால் மனைவி மற்றும் மகன்களை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துள்ளார். மேலும் ஆன்லைன் கேம் மூலமாகவும் இவர் பணத்தை இழந்து உள்ளார் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: Rise of Covid-19 Cases in WB | நாளை முதல் பள்ளிகள் அடைப்பு; இரவில் ஊரடங்கு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.